
வெலிக்கடை சிறை படுகொலையின் 34 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 போராளிகள் நினைவு கூரப்பட்டனர்.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடத்தப்பட்ட இந் நிகழ்வில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் புவனேஸ்வரன்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.