வெலே சுதாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

244

முன்னணி போதைப் பொருள் வர்த்தகராக கருதப்படும் வெலே சுதாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெலே சுதாவிற்கு மரண தண்டனை விதித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதவான் பீரித் பத்மன் சூரசேனவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7.06 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெலேசுதாவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஜனாதிபதி உத்தரவிடும் திகதியில் உத்தரவிடும் நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்கிலிட்டு வெலேசுதாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெலே சுதா போதைப்பொருளை வைத்திருந்ததாக கல்கிஸ்ஸ காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், சட்ட மா அதிபர் திணைக்களம் செய்த பரிந்துரைக்கு அமைய இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து பாரியளவில் போதைப் பொருட்களை கடத்தியமை உள்ளிட்ட மேலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வெலே சுதாவிற்கு எதிராக மேலும் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெலே சுதா மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE