வெளிச்சம் அறக்கட்டளையின் ஊடாக உதவிகள்

183

09-06-2018 தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பாலா ஐயா அவர்களின் நிதி பங்களிப்புடன் செட்டிகுளம் பிரதேசத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொதியும் சிறு தொகை பணமும் இன்றைய தினம் வெளிச்சம் அறக்கட்டளை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு. பா.லம்போதரன், செயலாளர் திரு.தி.கார்த்திக், பொருளாளர் திரு. செ.மேனதாஸ் மற்றும் சமூக நலன் விரும்பி ஜெகன் அவர்களும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் விஜயகுமார் மற்றும் றஜுவ் , சுரேஷ் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

  
  
SHARE