வெளிநாடுகளில் வாழும் 35000 இலங்கையர்களுக்கு கிடைத்த நன்மை

201

கடந்த 3 வருடத்தில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 35000 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2017ஆம் ஆண்டில் மாத்திரம் 12000 புலம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 700 – 800 இலங்கையர்கள் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட ஆய்வு குழு மூலம் இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

SHARE