வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பப் பின்னணி அறிக்கை: ஆராய குழு நியமனம்

137

பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று செல்லும் போது குடும்பப் பின்னணி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டிய நடைமுறையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அமைச்சரவையில் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து, பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் போது குடும்ப பின்னணி அறிக்கை பெற்றுக் கொள்ளும் நடைமுறை குறித்து மீளாய்வு செய்யும் நோக்கில் துணை அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான சரத் அமுனுகம, விஜயதாச ராஜபக்ச, ஹரீன் பெர்னாண்டோ, தலதா அதுகோரள மற்றும் சாந்தனி பண்டார ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE