வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்

145

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் யாமீனை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் விரைவில் விடுவிக்கப்படுவார் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்ஹாராஹிம் மொஹமட் சொலிஹ்ஹின் பதவிப்பிரமாண நிகழ்வில் பங்கேற்க சென்றிருந்த அமைச்சர், குற்றவாளியாக கருதப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள லஹிரு மதுஷங்கவை சந்தித்துள்ளார்.

இது குறித்த கருத்து தெரிவிக்கும் போதே மதுஷங்க விரைவில் விடுதலையாவார் என அமைச்சர் பைசர் முஸ்தபா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுஷங்க கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மாலைத்தீவில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE