வெளிநாடொன்றில் மனைவியை குத்தி கொலை செய்த இலங்கையர்

194

மத்திய கிழக்கு நாடான ஷார்ஜாவில் Maysaloon பகுதியில் இலங்கையர் ஒருவர் மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் நடைபெற்றது.

இதன் போது சந்தேக நபரான கணவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக ஷார்ஜா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த கொலை தொடர்பில் தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்த பின்னர், பொலிஸ் கட்டுப்பாட்டு அறை தடய நிபுணர்கள் மற்றும் அம்புலன்ஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற குழுவினர் இரத்த வௌ்ளத்தில் கிடந்த பெண் ஒருவரை அவதானித்துள்ளார். அதன் பின்னர், அங்கு கைரேகைகள் மற்றும் ஆதாரங்கள் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸார் குற்ற விசாரணை அதிகாரிகள் குழுவொன்று நியமித்து சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டது. பின்னர் அந்த குழு சந்தேக நபரை கைது செய்தது.

மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்குப் பின்னர் சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். உயிரிழந்த பெண்ணுடன் தான் முறையற்ற உறவை வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE