வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

144

கல்கிஸ்சைக்கும் – ரம்புக்கனைக்கும் இடையில் சொகுசு ஹிட்டாச்சி ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைக்கான கட்டணமாக 3000 ரூபா அறிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதலாவது ரயில் ஒவ்வொரு நாளும் காலை 8.30க்கு கல்கிஸ்சையில் இருந்து புறப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

SHARE