வெளிநாட்டில் குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் தெரியுமா….?

193

அமெரிக்காவில் குழந்தை அழுதால் கூட கண்டுகொள்ளமாட்டார்கள்

அமெரிக்கர்கள் தங்கள் குழந்தைகள் மத அறநெறிப்படி வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதே நேரத்தில் தங்கள் குழந்தைகள் சுதந்திரமாகவும், சுயச்சார்பு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். குழந்தைகள் அழுதால் கூட பல நேரங்களில் கண்டுகொள்ள மாட்டார்கள். ‘குழந்தைகள் அழுவதன் மூலம் தங்களைத்தாங்களே ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அமெரிக்கர்கள் நினைப்பார்கள். பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்துக்கு குறைவாகவே செலவழிப்பார்கள்.

பாரம்பர்ய முறையில் வளர்ப்பது தென் ஆப்ரிக்கா ஸ்டைல்!

பாரம்பர்ய முறையில் குழந்தைகளை வளர்ப்பது தென் ஆப்ரிக்கர்களின் ஸ்டைல். இங்கேயும் தாத்தா-பாட்டிகளே குழந்தைகளை கவனித்துக்கொள்கின்றனர். இவர்களைத் தவிர தாய்தான் குழந்தைகளை அதிகம் கவனித்துக்கொள்கிறார். தென் ஆப்ரிக்காவில் குழந்தைகளை கவனித்துக்கொள்வதில், தந்தையின் பங்கு மிகவும் குறைவுதான்.

சுதந்திரமாக வளர்க்கும் ஃபிரான்ஸ் மக்கள்!

ஃபிரான்ஸ் நாட்டில், குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் நினைப்பார்கள். பூங்காவில் விளையாடும் போது கூட அவர்கள் பின்னால் நின்று கொண்டிருப்பது, அவர்களோடு விளையாடுவது போன்றெல்லாம் செய்யமாட்டார்கள். அதேபோல குழந்தைகள் செய்வதை விமர்சனம் செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடமாட்டார்கள். பட்டும் படாமலும்தான் குழந்தைகள் மீது பாசம் வைப்பார்கள்.
சீனாவில் தாத்தா-பாட்டி செல்லங்களாக வளரும் குழந்தைகள்

சீனாவில் குழந்தை வளர்ப்பு கலாசாரத்தில், தாத்தா-பாட்டிகளின் பங்கு பெரும் அளவுக்கு இருக்கிறது. தங்கள் பேரக்குழந்தைகள் வளர்ப்பில் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கு ஆயாக்களை அமர்த்துவது என்பது சீனாவில் அரிதினும் ஒன்றாக இருக்கிறது. ஒரு குழந்தையை பெற்றோர்களும் அக்கறை எடுத்து கவனித்துக்கொள்கின்றனர்.
தந்தையும் குழந்தைகளை கவனிக்கிறார்

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தின் மதிப்புகளை மிகவும் மதிக்கின்றனர். ஆஸ்திரேலியர்களின் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. தாயைப் போலவே தந்தையும் குழந்தையை கவனித்துக்கொள்வார். குழந்தைகளுக்கு சேமிப்பு போன்ற நிதி சார்ந்த விஷயங்களையும் ஆஸ்திரேலியர்கள் கற்றுக்கொடுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உத்தரவிடுவது இல்லை. குழந்தைகளின் யோசனைகளைக் காதுகொடுத்துக் கேட்பார்கள்.

SHARE