
இலங்கையில் தூதரகம் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் பளிஹக்காரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர்.
வடக்கு ஆளுநராக பளிஹக்கார இன்று காலை 9 மணிக்கு பதவியேற்றுக் கொண்ட பின்னர் மேற்கொண்ட முதல் சந்திப்பு இதுவாகும்.