
வெளிநாட்டு கோடீஸ்வரர் ஒருவருக்கு இந்தியாவில் வசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருவர் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை 18 மாதங்களிலோ அல்லது 3.75 மில்லியன் யூரோக்களை மூன்று வருடங்களினுள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
இதுபோல் அவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் 20 இந்தியர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே குறித்த இலாபத்திற்காக இந்த வெளிநாட்டு கோடீஸ்வரருக்கு இந்தியாவில் 10 வருடங்களுக்கு வசிப்பதற்கான விசா வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரையும் இந்தியாவிற்கு வரவழைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை,குறித்த கோடீஸ்வரருக்கு இந்தியாவில் வீடு ஒன்று கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் ஒவ்வொரு வருடமும் தம்மை மீள்பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதோடு, இந்த வாய்ப்புக்கள் சீனா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டவர்களுக்கு இந்தியாவில் மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.