ஆயுத தயாரிப்பு தொடர்பில் வெளிநாட்டு சஞ்சிகைகளை வாசித்து அந்த அறிவைக் கொண்டு துப்பாக்கிகளை தயாரித்த நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கஹாவத்தை பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதுடன், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கஹாவத்தை மாதம்பே பிரதேசத்தில் இந்த ஆயுத உற்பத்திச்சாலை இயங்கி வந்துள்ளது.
ஆயுத உற்பத்தி தொடர்பில் வெளிநாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளை படித்து அதன் அறிவினைக் கொண்டு பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபர் ஆயுதமொன்றை கஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 25000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். ஆயுதத்தை கொள்வனவு செய்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.