வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக 160 வழக்குகள்

154

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் 160 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோத செயற்பாடுகளில் அதிகாரிகள் தொடர்புபட்டிருந்தால் அதற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சீசெல்ஸில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக பெரும் எண்ணிக்கையிலானவர்களை ஏமாற்றிய நிறுவனமொன்றின் மீது அதிகளவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

163 வழக்குகளில் 135 வழக்குகள் ஒரே நிறுவனத்திற்கு எதிரானது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE