சிவகார்த்திகேயன் கேரியரில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று சீமராஜா.
ஆம், ஏனென்றால், இதற்கு முன் பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், மீண்டும் இவர்கள் இணைந்த சீமராஜா படத்தின் மீது அளவுடகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்தனர்.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. திரையரங்கில் பெரிதளவில் இப்படம் வெற்றிபெறவில்லை என்றாலும், தொலைக்காட்சியில் அதிக TRP வைத்திருக்கும் டாப் 5 தமிழ் படங்களில் சீமராஜாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த வசூல்
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி, சமந்தா, சிம்ரன், நெப்போலியன், லால் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இன்றுடன் சீமராஜா திரைப்படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது.
இதை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பல விமர்சனங்களுக்குள்ளான சீமராஜா திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.