வெளிவிவகார அமைச்சரும், நீதி அமைச்சரும் ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்

291

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 30ம் அமர்வுகள் இந்த மாதம் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வுகளில் இலங்கை யுத்தம் தொடர்பிலான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது குறித்து எதிர்வரும் 14ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளக விசாரணைப் பொறிமுறைமையை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இலங்கைக்கு ஆதரவான தீர்மானமொன்றை அமெரிக்கா சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கையின் முக்கிய அமைச்சர்கள் இருவரும் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக இலங்கையின் சார்பில், ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கத் தீர்மானிக்கபப்பட்டிருந்தது.எனினும் தற்போது அரசாங்கம் அந்த தீர்மானத்தை மாற்றியமைத்துக்கொண்டுள்ளது. ஜெனீவாவிற்கான விஜயம் தொடர்பில் அமைச்சர் சமரவீர ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 12ம் தகிதி விசேட விளக்கமொன்றை அளிக்க உள்ளார்.

SHARE