அதிக வெள்ளம் காரணமாக கொழும்பு சேதுவத்தை பகுதியில் வசிக்கும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (19) நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதில் மரணமடைந்தவர்கள் மூவரும் சேதுவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக தகவல்கள் இதுவரை தெரியவில்லை எனவும் அறியமுடிகின்றது.
மரணமடைந்தவர்களின் சடலங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒருவரின் சடலம் மீட்பு
சேதுவத்தை பகுதியில் மூவர் மரணமடைந் நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் கொழும்பில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.