வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2 லட்சத்தை வழங்கிய தீபிகா

346
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் ரூ.2 லட்சத்தை வழங்கியுள்ளார்.தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பல்லிகல் ரூ.2 லட்சத்தை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மழை வெள்ளத்தால் சென்னை நகரம் ஒரு தீவாக மாறியிருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.

சென்னை மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சத்தை வழங்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

SHARE