தென்பகுதியில் மண்சரிவு, மழைவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்த அழைப்புக்கு அமைவாக வவுனியா வர்த்தக சங்கத்தினால் ஒரு தொகுதி பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு எம்.பி. ரோகண புஸ்பகுமாரவிடம் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.கே. இராஜலிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
பொருட்களைப் பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் ஓரிரு தினங்களில் வவுனியா மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் தென்பகுதியில் மண்சரிவு, பெரு வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சென்றடைய ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் உலர் உணவுப் பொருட்களை வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் தெரிவித்தார்.
தகவலும் படங்களும் :- காந்தன்