வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவி வழங்கி வைப்பு

327

 

முல்லையில் வெள்ளத்தால் பாதிப்படைந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களை நேரில்சென்று பார்வையிட்டு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்.
புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு பகுதியில் வெள்ளத்தால் பாதிப்படைந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களை நேரில்சென்று பார்வையிட்டு குழந்தைகளுக்கான பால்மா, உலர் உணவு, உடுப்புடவை, நுளம்புவளை, சத்துணவு உட்பட்ட பொருட்கள். கள்ளப்பாடு,  உடையார்கட்டு இருட்டுமடு, முள்ளியவளை பொன்னகர், வசந்தபுரம் , கெருடமடு, முத்தையன்கட்டு, திருமுறிகண்டி, புத்துவெட்டுவான் ஆகிய பொது இடங்களில் தங்கியிருந்த மக்களை பார்வையிட்டதுடன் மேற்படி உதவிகளை வழங்கிவைத்தார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்க தலைவர் திரு.நீதன் வர்த்தக சங்க செயலாளர் ஆகியோரும் இணைந்து மக்களுக்கான குறிப்பிட்ட பொருட்டகளை வழங்கிவைத்தனர்;.
SHARE