வெள்ளம், நிலச்சரிவினால் நான்கு இலட்சம் பேர் பரிதவிப்பு

262

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நிலச்சரிவுகளில் சிக்கிய 134 பேர் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் நிலச்சரிவிலும், களனி கங்கை பெருக்கெடுத்து கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திலும் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டு தீவிரமான தேடுதல், மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கொழும்பின் கொலன்னாவ, வெல்லம்பிட்டிய,களனி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 20 ஆயிரம் பேர் நேற்று மீட்கப்பட்டனர்.

இந்த அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை414,627 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 306,773 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

களனி கங்கை நீர்மட்டம் நேற்று மீண்டும் அதிகரித்தால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு நூற்றுக்கணக்கான படகுகள் ஈடுபடுத்தப்பட்டன.

1992ஆம் ஆண்டு இதுபோன்று ஏற்பட்ட வெள்ளத்தின் போது, உடமைகளைப் பறிகொடுத்த சுமார் 15 ஆயிரம் பேர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள தமது வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். இவர்களை இராணுவத்தினர் பலவந்தமாக மீட்டு வருகின்றனர்.

இதேவேளை கேகாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட அரநாயக்க மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய இடங்களில் இராணுவத்தினர் தொடர்ந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், மீட்பு நடவடிக்கைகளில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 வரை இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இயற்றை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுமாறு, சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.sri-lanka-floodsri-lanka-flood-1

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

SHARE