வெள்ளவத்தை பகுதியில் வெள்ளம்

249

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளவத்தை பகுதியில் உள்ள வடிகாலமைப்பு தடைப்பட்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்க்கரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளவத்தைப் பகுதியில் வடிகாலமைப்புகள் தடை ஏற்பட்டுள்ளதால் வெள்ளநீர் வலிந்தோட முடியாது பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியிருப்பதாகவும் இந்த வீதியில் பயணிக்கும் அனைவரும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அவர் அதனை தான் பொறியிலாளர் சஞ்சீவனுடன் நேரடியாகச் சென்று சீர் செய்துவருவதாகவும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

SHARE