வெள்ளியாக உருமாறும் இந்திய வீரரின் ஒலிம்பிக் வெண்கலப்பதக்கம்!

255

இந்திய மல்யுத்த வீரர் யோயேஷ்வர் தத்திற்கு கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்திற்கு பதில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில், தகுதிச் சுற்றிலேயே தோற்று ஏமாற்றம் அளித்தார், இந்தியாவின் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்.

2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில், 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் யோகேஷ்வர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ மல்யுத்த பிரிவில் ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் வெள்ளிப்பதக்கம் பெற்று இருந்தார். 2013ம் ஆண்டு ரஷியாவில் நடந்த விபத்தில் அவர் உயிர் இழந்தார்.

இதற்கிடையே அவர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது பதக்கத்தை பறிக்க இருக்கிறார்கள்.

அதனால், 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத்திற்கு வெள்ளிப் பதக்கம் தர இருக்கிறார்கள். லண்டன் ஒலிம்பிக்கில், யோகேஷ்வர்,குடுகோவிடம் தான் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (5)

SHARE