வெள்ளைக்கொடி விவகாரம் சரணடைந்தவர்கள் காணமற்போன சம்பவங்கள் யுத்தத்திற்கு வெளியே இடம்பெற்றசம்பவங்கள்:

245

சனல்4 இல் காண்பிக்கப்பட்டவைகள், வெள்ளைக்கொடிவிவகாரம் மற்றும் சரணடைந்தவர்கள் காணமற்போனது போன்ற சம்பவங்கள், யுத்தத்திற்கு வெளியே, இடம்பெற்ற தனித்தனி சம்பவங்கள், இவை குறித்து முழுமையான முடிவிற்கு வருவதற்கு ஆழமான விசாரணைகள் அவசியம்.
மேலும் இந்த தவறுகள் பாதுகாப்பு படையினரால் இழைக்கப்பட்டவை என்ற முடிவிற்கு நாங்கள் எந்த தருணத்திலும் வரவில்லை என மக்ஸ்வெல்பரணகம தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சியொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அரசாங்கம் தான் உருவாக்கவுள்ள பொறிமுறையில் வெளிநாட்டவர்களிற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டும் என்பது அரசியல்ரீதியான முடிவு அதற்குள் நாங்கள் தலையிடவிரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவுது.

நாங்கள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதலைப்புலிகள் ஊடாக இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளதுடன் அவை குறித்து ஆராய்ந்துள்ளோம்.
எங்களிற்கு கிடைத்த ஆதாரங்கள் மற்றும் வேறு ஆவணங்கள் மூலமான ஆதாரங்களை அடிப்படையாகவைத்து சில தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை விசாரணை இல்லாமலே ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆனால் பொதுமக்களிற்கு முக்கியமான சில சம்பவங்கள் உள்ளன,சனல்4 இல் காண்பிக்கப்பட்டவைகள், வெள்ளைக்கொடிவிவகாரம் மற்றும் சரணடைந்தவர்கள் காணமற்போனது போன்றவைகள்,இவை யுத்தத்திற்கு வெளியே இடம்பெற்ற தனித்தனி சம்பவங்கள்,இவை குறித்து முழுமையான முடிவிற்கு வருவதற்கு ஆழமான விசாரணைகள் அவசியம்.
மேலும் இந்த தவறுகள் பாதுகாப்பு படையினரால் இழைக்கப்பட்டவை என்ற முடிவிற்கு நாங்கள் எந்த தருணத்திலும் வரவில்லை,படையினர் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என எங்களால் தெரிவிக்கமுடியும்,அவர்கள் அதற்கான சகலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்,அவர்கள் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கினர்,அவர்கள் எப்போதும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காவே செயற்பட்டனர்,சிலவேளைகளில் அவர்கள் பொதுமக்களை காப்பாற்றுவதற்காக துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது,துப்பாக்கிபிரயோகங்களிற்கு இடைநடுவில் சிக்கி சில பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.
நாங்கள் மனிதாபிமான கொள்கையை விகிதாச்சார அடிப்படையில் பயன்படுத்தியுள்ளோம்,நாங்கள் ஒரு சமநிலையான அறிக்கையை வழங்கியுள்ளோம்.
எமது படையினர் மனிதாபிமானநடவடிக்கையை மேற்கொண்டதை கருத்தில்கொள்ளும்போது,உயிரிழப்புகளை ஏற்படுவதை தவிர்ப்பது கடினம், இருதரப்பும் ஆயுதங்களுடன் காணப்பட்டதை கருத்தில்கொள்ளவேண்டும்.
நாங்கள் ஒரு பொறிமுறையையும் சிபாரிசு செய்துள்ளோம்,இருதரப்பையும் சேர்ந்த எவராவது தவறு இழைத்திருந்தால் அந்த நடைமுறையை பயன்படுத்தி எப்படி அவர்கள் தங்களை விடுவிக்கலாம் என்பதை தெரிவித்துள்ளோம்.
விசேட உயர்நீதிமன்றமொன்றை ஏற்படுத்துமாறு பரிநதுரை செய்துள்ளோம்,படையினர் எவராவது தவறு இழைத்துள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டால் அவர்கள் அந்த நீதிமன்றத்தை பயன்படுத்தி தாங்கள் நிரபராதிகள் என்பதை நிருபிக்கமுடியும்.
மேலும் நாங்கள் உண்மை ஆணைக்குழுவையும் பரிந்துலைசெய்துள்ளோம், இருதரப்பையும் சேர்ந்தவர்கள் தாங்கள் அந்த நீதிமன்றத்தின் முன்னிலையில் சென்று நான் இந்த சூழ்நிலையின் கீழ் குற்றமிழைத்துள்ளேன்,மன்னிப்பு வழங்குங்கள் என கோரலாம், ஆணைக்குழு அதனை செவிமடுக்கும்.நாங்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது கடினமான செயல் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE