வெள்ளைவான் சம்பவம் குறித்து சாட்சியமளிக்க மேர்வின் சில்வாவிற்கு அழைப்பாணை

326
வெள்ளைவான் சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு அழைப்பாணை உத்தரவிடப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மட்டக்குளி பிரதேசத்தில் மூன்று பேர் காணாமல் போதல் சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சியாளராக மேர்வின் சில்வா அழைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதிமன்றம் இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

வெள்ளைவான் கலாச்சாரம், ஆட்கடத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவிடம் செய்த முறைப்பாடு ஆகியனவற்றின் அடிப்படையில் மேர்வின் சில்வாவை இந்த வழக்கின் சாட்சியாளராக அழைக்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்கள் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, மேர்வின் சில்வாவை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SHARE