வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்

150

அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நபரை உளவுத்துறை பொலிசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பணிகளை முடித்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளை மாளிகையில் ஓய்வில் இருந்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வசிப்பதால் வெள்ளை மாளிகை சுற்றி எந்த நேரமும் பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 11.38 மணியளவில் வெள்ளை மாளிகையில் உள்ள South Grounds என்ற பகுதியில் மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி உட்புறமாக குதித்துள்ளார்.

இதனை கண்டுபிடித்த உளவுத்துறை அதிகாரிகள் உடனடியாக நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ஒரு கைப்பையையும் கைப்பற்றியுள்ளனர்.

நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கலிபோர்னியாவை சேர்ந்த Jonathan Tran(26) என்பது தெரியவந்துள்ளது.

இத்தகவல் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டவுடன், உளவுத்துறை அதிகாரிகளை டிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE