வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி திருமணம்

144

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வோஷிங்டனில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்களின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று முன்தினம் நடந்தது.

ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளன. முதல் முறையாக ஜனாதிபதி பேத்திக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து சென்ற முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE