வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? பொலிஸ் அதிகாரியின் அதிர்ச்சித் தகவல்

359
கடந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொலை செய்து, குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பல், சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக சிரேஷ்ட காவல்த்துறை அதிகாரியும் முன்னாள் காவல்த்துறை ஊடகப் பேச்சாளருமான பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றின் போது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இக்கொலைகளுக்காக தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஆயுதக் குழுக்களையும் கடந்த அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் அரசியல்வாதியாகவும், பாதுகாப்பு செயலாளராகவும் செயற்பட்ட கோத்தபாய ராஜபக்ச சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட்டார்.

அவர்களின் குற்றங்கள் மற்றும் சட்ட விரோத செயல்களை நியாயப்படுத்துமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளரான தனக்கு வழியுறுத்தியதாகவும் அதனை நிராகரித்தமையினால் தன்னை மட்டக்களப்பிற்கு மாற்றம் செய்துள்ளதாகவும்,

கிழக்கு ஆயுதக் கும்பல்களை பயன்படுத்தி தன்னை கொலை செய்ய திட்டமிட்டதனால் தான் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தினுள் மனிதர்கள் வாழ்வதா? இல்லையா? எவ்வளவு காலம் வாழ்வது? என்பதனை குறித்து தீர்மானித்ததும் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்சவாகும்.

வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்படவர்களின் விதியும் இதுவாகும். குறித்த குழு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கியது. அதற்கு தொடர்புடையவர்களும் இராணுவத்தில் இருந்த நபர்களாகும்.

அந்தக் காலத்தில் கொல்லன்னாவை நகர முதல்வரை கடத்திச் சென்றதும் இந்நபர்களே. மக்கள் அக்குழுவை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த போதிலும் சிரேஷ்ட பிரதி காவல்த்துறை அநுர சேனாநாயக்க குற்றவாளிகளை விடுதலை செய்தார்.

download-14-640x400

இக்குற்றங்களுக்கு தொடர்புடைய நபர்கள் இதுவரையிலும் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிர்வரும் அரசாங்கத்தின் கீழாவது தண்டனை வழங்க வேண்டும் என சிரேஷ்ட காவல்துறை அதிகாரியும் முன்னாள் காவல்துறை ஊடக பேச்சாளருமான பிரியந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

SHARE