வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு உதவும் நடவடிககையில்; அவைத்தலைவர் சீ;வீ.கே. சிவஞானம் தலைமையில் நாளை கலந்துரையாடல்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவிற்கு பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பெரும் சொல்லொணா துயரங்களை அடைந்த தமிழக மக்களுக்கு எமது அனுதாபத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- வெள்ளத்தினால் பல லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்கை பாதிகப்பட்டிருகின்றது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், பலர் காணாமல் போயும், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தும், தமது அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமலும் உணவுக்காகவும் பலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசும் இந்திய அரசும் அவசர உதவிகளைச் செய்து வருகின்றது. எனினும் அவர்கள் வாழ்க்கை வழமை நிலைக்கு திரும்ப சர்வதேச சமூகம் உதவிகளை செய்யவேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். வட, கிழக்கு தமிழ் மக்கள் ஆகிய நாமும் அவர்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் பங்குகொள்வதோடு, அவர்களின் நிலைமை வழமைக்குத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். இவர்களது இயல்பு வாழ்கை திரும்பலுக்கு ஏராளமான நிதித் தேவை உள்ள நிலையில் எமது வடக்கு மாகாண சபையும் எமது மக்கள் சார்பான உதவிகளை மேற்கொள்ள முன் முயற்சி எடுக்கிறது என்பதையும் தெரிவித்துகொள்கிறோம். இலங்கைத் தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவாக இருந்து எமது மக்களுக்காக தொடர்ந்து இந்தியாவிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுத்தவர்கள் தமிழக மக்கள் எமது மக்களுக்காக போராட்டங்களை நடத்தியவர்கள் உயிர்த்தியாகம் செய்தவர்களின் உறவுகள் இன்று இயற்கை அனர்த்தினால் நிர்க்கதியாகியுள்ளார்கள். அவர்களின் இயல்பு நிலை கூடிய விரைவில் திரும்பும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவர்களின் துன்பங்களிலும் துயரத்திலும் எமது வட மாகாண சபையும் தமிழ் தேசிய இனமும் பங்குகொள்கின்றது எனத் தெரிவித்துக் கொள்கின்றோம்.