வெள்ள அனர்த்தம்: சர்வதேசத்திடம் உதவி கோருகிறது இலங்கை

220

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நாடுகளிடமிருந்து மருத்துவ சேவைகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகளை எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டபோதும் மக்கள் வெளியேறிவில்லை எனவும் விசனம் வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களை தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நேற்று வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அனர்த்தங்கள் தொடர்பான பரிபூரணமானதும் துல்லியமானதுமான புள்ளி விபரங்களை கணிக்க முடியாமல் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.colombo

SHARE