வெள்ள அனர்த்தம்.. சொந்த வீடு­க­ளுக்கு சென்று கண்ணீர் விடும் மக்களின் நிலையை பாருங்கள்..

178

சீரற்ற கால­நிலை கார­ண­மாக கொழும்பு மற்றும் புற­நகர் உள்­ளிட்ட பகு­தி­களில் கடந்த சில தினங்­க­ளாக தேங்­கி­யி­ருந்த வெள்ளநீர் வடிந்­தோ­டி­யுள்ள நிலையில் தமது சொந்த வீடு­க­ளுக்கு செல்லும் மக்கள் பல்­வேறு பாதிப்­புக்­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றனர்.

உணவு சமைக்க வழி­யில்­லா­மலும் வீடு­களில் இருந்த பொருட்­களின் அழி­வ­டைந்­துள்­ள­தாலும் மக்கள் செய்­வ­த­றி­யாது தவித்­து­வ­ரு­கின்­றனர்.

கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்ட மக்­களே இவ்­வாறு கடும் பாதிப்­புக்­களை சந்­தித்து வரு­கின்­றனர். குறிப்­பாக சிறு குழந்­தை­க­ளுடன் வீடு திரும்பும் பாதிக்­கப்­பட்ட மக்கள் உணவு, மாற்­றுடை குழந்­தை­க­ளுக்­கான பால் மா என எந்­த­வித அடிப்­படை தேவை­களும் இல்­லாத நிலை­யிலும் திண்­டா­டி­வ­ரு­கின்­றனர்.

கொலன்­னாவ வெல்­லம்­பிட்­டிய கடு­வளை நவ­கம்­புர உள்­ளிட்ட பல பகு­தி­க­ளிலும் மக்கள் இவ்­வாறு அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். பல இடங்­களில் மிரு­கங்கள் இறந்­துள்­ள­தாலும் குப்­பைகள் மலைபோல் உயர்ந்­துள்­ள­தாகும் மக்கள் பாதிப்­புக்­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். அத்­துடன் நீர் மாச­டைந்து துர்­நாற்றம் வீசத்­தொ­டங்­கி­யுள்ள மக்கள் பல்­வேறு சுகா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்­ளனர்.

இது இவ்­வாறு இருக்க பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் தூய்­மை­யாக்கல் பணி­களில் தற்­போது இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் மோட்டார் சைக்­கிள்கள் கார் வேன் போன்­ற­வற்றை மக்கள் வீடு­களில் விட்­டு­விட்டே பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வௌ்ளத்­தின்­போது சென்­றி­ருந்­தனர். இந்­நி­லையில் வௌ்ள நீர் வடிந்­தோடி நிலையில் வீடு திரும்­பிய மக்கள் தமது பொருட்­களின் நிலை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

விசே­ட­மாக வீடு­களில் இருந்த இலத்­தி­ர­னியல் பொருட்கள் உள்­ளிட்ட அனைத்து பொருட்­களும் வௌ்ள நீரினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் வீடு திரும்­பி­வ­ரு­கின்ற மக்கள் பாரிய அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ள­துடன் செய்­வ­த­றி­யாது நிற்­கின்­றனர். மேலும் வீடு­களை தூய்­மைப்­ப­டுத்­து­வ­திலும் மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

குறிப்­பாக துர்­நாற்றம் வீசு­கின்ற மற்றும் குப்­பை­க­ளினால் நிறைந்து காணப்­ப­டு­கின்ற வீடு­களை சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான மருந்­து­வ­கைகள் இன்­றியும் மக்கள் அவ­ச­திப்­பட்#173;டு­வ­ரு­கி்ன்­றனர்.

“”இதே­வேளை களனி கங்­கையின் நீர் திறந்­து­வி­டப்­படும் என்று உரிய முறையில் எங்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்தால் நாங்கள் பாது­காப்­பான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருப்போம். ஆனால் எமக்கு எவ்­வி­த­மான அறி­விப்­புக்­களும் செய்­யப்­ப­டா­ம­லேயே இந்த செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதனால் எங்­க­ளினால் பெறு­ம­தி­யான பொருட்­களைக் கூட பாது­காக்க முடி­ய­வில்லை”” என்று வீடு­க­ளுக்கு திரும்­பிய பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர்.

அத்­துடன் இதற்கு முன்னர் வௌ்ளம் ஏற்­பட்­ட­போது இவ்­வாறு அதி­க­ளவு நீர் வந்­த­தில்லை. ஆனால் இம்­முறை அதிக வௌ்ளம் ஏற்­பட்­டதால் எங்­க­ளினால் சமா­ளிக்க முடி­யாமல் போனது என்றும் பாதிக்­கப்­பட்ட மக்கள் குறிப்­பிட்­டனர்.
இது இவ்­வாறு இருக்க வௌ்ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட வெல்­லம்­பிட்­டிய பகு­தியை சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் தமது துயரம் குறித்து குறிப்­பி­டு­கையில்

இந்த வௌ்ள அனர்த்­தத்தில் சொல்­லொணா துன்­பங்­களை நாங்கள் எதிர்­கொண்டோம். பெரும்­பா­லான மக்­களின் வேன் கார் மோட்டார் சைக்­கிள்கள் மற்றும் முற்­சக்­கர வண்­டிகள் இந்த வௌ்ளத்தில் மூழ்­கி­விட்­டன. அது மட்­டு­மன்றி வீட்­டி­லி­ருந்த குளிர்­சா­தன பெட்­டிகள் தொலைக்­காட்சி சலவை இயந்­தி­ரங்கள் எரி­வாயு அடுப்­புக்கள் என்­பன முழு­மை­யாக நீரில் மூழ்­கி­ய­மையின் கார­ண­மாக நாச­ம­டைந்­து­விட்­டன. அத்­துடன் வீட்டு உப­க­ரண தள­பா­டங்­க­ளான கதி­ரைகள் மேசைகள் கட்­டில்கள் என்­ப­னவும் நீரில் மூழ்­கி­யுள்­ளன. இதனால் மக்கள் பல துய­ரங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர் என்றார்.

அத்­துடன் வீடு திரும்பும் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது பொருட்­களின் நிலை­மை­களை பார்த்து விரக்­தி­ய­டைந்­துள்­ளனர். ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நீர் இருந்தமையினால் அனைத்து பொருட்களும் நாசமாகிவிட்டன. தற்போது வீடு திரும்பும் மக்கள் உணவு தயாரிக்க முடியாமல் அவதியுறுகின்றனர்.

காரணம் வீட்டில் உள்ள எந்தப் பொருட்களையும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. நான் கூட எனது வீட்டுக்கு திரும்பி ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் இருந்தேன் என்றார்.

(ரொபட் அன்­டனி)house

SHARE