வேகத்தில் மிரட்டிய அவுஸ்திரேலியா: திக்குமுக்காடி 227 ஓட்டங்கள் குவித்தது இலங்கை

167

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. குஷால் பெரேரா 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். டில்ஷான் நிதானமாக ஆடி வந்த நிலையில் 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

குஷால் மெண்டிஸ் (67) அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். இதனையடுத்து வந்த மேத்யூஸ் (0), தனன்ஜெய டி சில்வா (2), சிறிவர்த்தனே (19) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய துணைத்தலைவர் சந்திமால் அரைசதம் கடந்தார். திசர பெரேரா (21), தில்ருவான் பெரேரா (10) ஆகியோரும் நிலைக்கவில்லை. இதனால் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த துணை அணித்தலைவர் சந்திமால் 80 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில், ஜேம்ஸ் பால்கனர் 4 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

SHARE