
அதனைத் தொடர்ந்து நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியது. பின்னர் விண்டோஸ் இயங்குதளத்தில் வெளியான போன் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இருப்பினும் ஆண்ட்ராய்டு போன்களுடன் அதனால் போட்டி போட முடியவில்லை.
மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இவ்வகை போன்கள் மூலம் ஆகஸ்டு மாதம் முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மே மாதம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் போன்கள் நோக்கியா 3.1, நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 5.1 ஆகியவை அறிமுகமாகின.
இந்நிலையில் ஆண்ட்ராய்டின் புதிய வெர்ஷனான ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் செயல்படும் போன்களை நோக்கியா நிறுவனம் வெளியிடவிருக்கிறது. அவை, நோக்கியா 1, நோக்கியா 2, நோக்கியா 2.1,நோக்கியா 3, நோக்கியா 3.1 நோக்கியா 5, நோக்கியா 5.1, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 8 , நோக்கியா 8 சிரோகோ ஆகிய போன்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.