வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்!

251
உலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய  நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருகின்றன.

உலகில் பணியிடங்களில் அதிக ரோப்போக்களை பணியமர்த்தியுள்ள நாடுகள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்து. இந்தபட்டியலில் தென் கொரியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. தென் கொரியாவில் கிட்டத்தட்ட 10,000 பணியாளர்களுக்கு 631 ரோபோக்கள் பணியமர்த்தப்படுகின்றது.

இதேபோன்று, தென் கொரியாவை அடுத்து, சிங்கப்பூர் இரண்டாம் இடத்திலும் ஜெர்மனி மூன்றாம் இடத்திலும் ஜப்பானுக்கு நான்காமிடமும் கிடைத்துள்ளன. அந்தவகையில், குறித்த நாடுகள் அதிகளவில் ரோபோக்களை பணியமத்த பயன்படுத்தப்படுகின்றன.

உலகளவில் 10,000 பணியாளர்களுக்கு 74 ரோபோக்கள் மட்டுமே போதுமானதாக காணப்படுகின்றதாம். இந்தியாவிலும் இதுபோன்று 10,000 பணியாளர்களுக்கு 3 ரோபோக்கள் மட்டுமே பணியமர்த்தப்டுள்ளன.

SHARE