வேகமாக வந்த ரயில் மோதி பரிதாபமாக பலியான பசுமாடு

282

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த பசுமாடுகள் கூட்டத்தில் ரயில் ஒன்று அசுர வேகத்தில் மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Niederbipp என்ற பகுதியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் பேர்ன் நகரில் இருந்து InterCity(ICN) என்ற ரயில் லவ்சென் நகரை நோக்கி சென்றுக்கொண்டு இருந்துள்ளது.

அப்போது, Niederbipp என்ற பகுதியில் அமைந்திருந்த தண்டாளத்தின் குறுக்கே பசுமாடுகள் கூட்டம் கடந்து சென்றுள்ளது.

இந்நிலையில், தூரத்தில் வந்த ரயிலின் ஓட்டுனர் பசுமாடுகளின் கூட்டத்தை கண்டு எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார்.

பசுமாடுகள் கூட்டத்தில் இருந்த மற்ற பசுமாடுகள் தண்டவாளத்தை விட்டு விலகிவிட, ஒரு பசுமாடு மட்டும் தண்டவாளத்தில் நின்றுள்ளது.

ரயிலின் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாததால், அது பசுமாட்டின் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பசுமாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.

எனினும், இந்த விபத்தில் ரயிலுக்கும் பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தண்டவாளத்தில் பசுமாடு ரயில் மோதி உயிரிழந்ததால், அவ்வழியாக சென்ற ரயில்கள் அனைத்தும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதேபோல், கடந்த ஏப்ரல் 9-ம் திகதி Graubunden மாகாணத்தில் உள்ள தண்டவாளத்தை கடந்த கரடி ஒன்று அதிவேக ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE