வேகமான 100W+ சார்ஜிங்! கேமராவில் கில்லாடி! Infinix Note 40 Pro+ 5G வாங்கலாமா?

30

 

nfinix நிறுவனம், மார்ச் 18 ஆம் தேதி மலேசியாவில் Note 40 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிமுக விழாவில் “வேகத்தை தழுவுங்கள்” (Embrace the Speed) என்ற வாசகத்தை முன்னிலைப்படுத்த இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Infinix Note 40 Pro+ 5G
தற்போது வெளியாக இருக்கும் Infinix Note 40 சீரிஸ், இந்த நிறுவனத்தின் இதுவரை இல்லாத சார்ஜிங் அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன் சீரிஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை Note 40 Pro+ 5G போனின் ரிடெய்ல் பாக்ஸ் படம் உறுதிப்படுத்துகிறது. இந்த படத்தில் குறைந்தது 100W வயர்டு சார்ஜிங் இருப்பது தெரியவந்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
புரொசெசர் (Processor): MediaTek Dimensity 8100 (அல்லது அதற்கு மேற்பட்டது) – வேகமான செயல்பாடு மற்றும் கேமிங் திறனை கொடுக்கும்ப.

பற்றரி (Battery): 5000mAh – நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் பற்றரி

சார்ஜிங் (Charging): 100W அல்லது 200W வயர்டு சார்ஜிங் மற்றும் MagCharge வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டு இருக்கலாம், இது மின்சாரத்தை மிக விரைவாக பெறுதல்.

டிஸ்பிளே (Display): FHD+ ரெசல்யூஷன் கொண்ட பிரகாசமான மற்றும் தெளிவான திரை

கேமரா (Camera): 108MP முதன்மை கேமரா கொண்ட மூன்று லென்ஸ் அமைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது சிறந்த புகைப்பட தரத்தை தரும்.

ஆபரேட்டிங் சிஸ்டம் (Operating System): Android 14

இறுதியில்…
வேகமான 5G இணைப்பு, 100W+ சார்ஜிங் மற்றும் கேமிங் திறன் ஆகியவற்றை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு Infinix Note 40 Pro+ 5G சிறந்த தேர்வாக இருக்கும். மார்ச் 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருங்கள்!

SHARE