வேகமெடுக்கும் டெங்கு நோய்த் தாக்கம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

31

 

டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டில் (2024) பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,000 ஐ தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 13 ஆம் திகதிவரை இலங்கையில், மொத்தம் 21,028 வழக்குகள் பதிவாகியுள்ள அதே சமயம், அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

அதிக எண்ணிக்கை
அந்தவகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் கொழும்பில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 4,527 ஆக காணப்படுகின்றது.

மேலும் மாகாண ரீதியில் மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்க இனங்காணப்பட்டுள்ள வேளையிலே 7,547 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மாகாண வாரியாக
அதேபோல் மாகாண ரீதியாக ஏப்ரல் மாதத்தில் முதல் 13 நாட்களுக்குள் அதிகபட்சமாக 989 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிக்கவும் சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE