வேதாளத்தில் நடித்தது அஜித்திற்காகவா? மனம் திறந்த லட்சுமி மேனன்

260

கடந்த வருடம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பிய படம் அஜித்தின் வேதாளம்.

வீரம் சிவா இயக்கிய இப்படத்தில் நாயகியாக நடித்து வந்த நடிகைலட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக நடித்து அனைவரிடத்திலும் நல்ல பெயரை வாங்கினார்.

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் அஜித்தின் தங்கை வேடம் என்பதால் தான் ஏற்றுக்கொண்டார் என கூறப்பட்டது. ஆனால் இது பற்றி முதன்முறையாக லட்சுமிமேனன் மனம் திறந்துள்ளார்.

இப்படத்தில் அஜித்திற்காக மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை, கதை தான் காரணம், தங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் பேசப்படும்படியாக சிவா வடிவமைத்திருந்தார்.

தல அஜித்திடம் கூட இக்கதையை முழுதும் சொல்லவில்லை, ஆனால் என்னிடம் கூறியிருந்தார் என்றும் இனி மீண்டும் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE