கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸி வசூல் புரட்சியை செய்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இப்படத்தை தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றது. ஆனால், ஒரு கதையை ரீமேக் செய்ய இயக்குனரும் சம்மதித்தால் தான் முடியுமாம்.
சிவாவிற்கு வேதாளம் படத்திற்காக கொஞ்சம் சம்பள பாக்கி இருப்பதால் அவர் இன்னும் ரீமேக்கிற்கு சம்மதிக்கவில்லை என பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.