வேப்பிலையில் இவ்வளவு அற்புத மருத்துவகுணமா?

169

வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும்.

ஆரோக்கியத்துக்கும், நமது உடலை கிருமிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும் வேப்பமரத்தில் இருந்து கிடைக்கும் இலைகள் உதவுகின்றன.

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும்.

வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது.

வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஒழியும்.

வேப்பம் பூ, மிளகு, இவை இரண்டையும் சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும்.

வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுகி வந்தால் முகம் பளபளப்பு அடையும்.

மாதவிலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் 3 கொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும் முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும்.

வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.

வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும்.

SHARE