வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே உள்ளது.
எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க உங்களுக்காகவே பிரத்யேக குளியல் பவுடர் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எலுமிச்சை பேஸ் பேக்
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை தோல்-50 கிராம்,
- கஸ்தூரி மஞ்சள்-100 கிராம்,
- கசகசா- 50 கிராம்,
- பயத்தம் பருப்பு- கால் கிலோ…
- கடலை மாவு- 6 டீஸ்பூன்,
- முல்தானி மட்டி- அரை டீஸ்பூன்,
- எலுமிச்சைச் சாறு- 4 டீஸ்பூன்
செய்முறை
- முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள் மற்றும் கசகசாவை மெஷினில் நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
- பிறகு கடலை மாவு, முல்தானி மட்டி மற்றும் எலுமிச்சை சாற்றை இதனுடன் கலந்து கொள்ளுங்கள்.
- இந்த பவுடரை முகம் முதல் பாதம் வரை பூசி பத்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.
- ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `பேக்’கை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.