ஹட்டன் அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அஞ்சல் சேவை பிரச்சினை தீர்வாக உறுதி செய்த கெபினட் பத்திரிகை தாமதமின்றி ஒப்புதல் வழங்குதல், சீரற்ற தெழில்நுட்ப சேவையை சீர் செய்து அஞ்சல் சேவை வீழ்ச்சியை தடுத்து நிறுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ப்பட்டு வருகிறது.
நாடளாவிய ரீதியில் அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் நாளைய தினம் வரையில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலே மலையகம் தழுவிய சகல தபாலக அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்ததில் ஈடுட்டுள்ளனர்.
எனினும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் அஞ்சல் தொலைத்தொடர்பு பயனாளிகள் பாதிப்டைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.