சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்த படம் வேல். இப்படம் அழகிய தமிழ் மகன், பொல்லாதவன் ஆகிய படங்களோடு 2007 தீபாவளிக்கு களம் கண்டது.
ஆனால், இறுதியில் மற்ற இரண்டு படங்களை விட வேல் தான் சூப்பர் ஹிட் ஆனது, இப்படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை ஹரி கூறியுள்ளார்.
ஹரி முதலில் ஐயா படத்தின் கதையை ரஜினியிடம் தான் கூறியுள்ளார், அந்த சமயத்தில் ரஜினியால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
அதை தொடர்ந்து வேல் கதையை ரஜினிக்காக உருவாக்கி, ஆனால், அவரிடம் சொல்லாமலேயே சூர்யாவை கமிட் செய்து ஹரி எடுத்துவிட்டாராம்.
பிறகு ஹரியை ரஜினி சந்திக்கும் போது எனக்கு ஏன் இந்த கதையை சொல்லவில்லைஎன்று செல்லமாக திட்டினாராம், இப்படி ஒரு மாஸ் படத்தில் ரஜினியால் நடிக்கமுடியாமல் போனதே என்று அவருடைய ரசிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தம் தான்.