வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் பால்

333
வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் பால்

கேரட் பால்
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்,
நாட்டு சர்க்கரை – 125 கிராம்,
ஏலக்காய் – 5 எண்ணம்,
கேரட் – 150 கிராம்

செய்முறை

கேரட்டை அரைத்து சாறு எடுத்துகொள்ளவும்.

அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி கொதிக்க விடவும்.

பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் சூடான பாலில் கரண்டியால் கலக்கி கொண்டே கேரட் சாற்றை ஊற்ற வேண்டும். கேரட்டானது நறுமண பாலுக்கு அற்புதமான நிறத்தை கொடுப்பதுடன் வைட்டமின் ஏ சத்தையும் அளிக்கின்றது.

வாசனை மற்றும் சுவைக்காக ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பாலை பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.

பின்பு பாலை ஆற வைத்து சுத்தமாக வடிகட்டி பேக்கிங் செய்து குளிர் சாதன பெட்டியில் குளிர்ச்சியாக வைத்து பருகலாம். அல்லது சூடாகவும் பருகலாம்.
SHARE