வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள்

275
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் 30,000 தாதியர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் நிலவி வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு வருடாந்தம் தாதியர் கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை பூர்த்தி செய்து வெளியேறும் தாதியரின் எண்ணிக்கை எந்த வகையிலும் போதுமானதல்ல.

அரச வைத்தியசாலைகளில் 65,000 தாதியர்கள் கடமையாற்ற வேண்டியிருந்த போதிலும், தற்போது 35,000 தாதியரே கடமையாற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக நகர்ப் புறங்களைப் போன்றே கிராமப் பகுதிகளிலும் சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்றன.

ஆண்டு தோறும் பயிற்சியை பூர்த்தி செய்து 4500 தாதியர் சேவையில் இணைந்து கொள்கின்ற போதிலும் இந்த எண்ணிக்கை குறித்த பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய எந்த வகையிலும் போதுமானதல்ல.

தாதியருக்கு நிலவி வரும் பற்றாக்குறையை நீக்குவதற்கு பட்டதாரி தாதியரை உருவாக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தாதியருக்கான விசேட பீடமொன்று உருவாக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாதியருக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் வரையில் புதிதாக வைத்தியசாலைகள், சத்திரசிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்டவற்றை அங்குரார்ப்பணம் செய்வதனை தவிர்க்க வேண்டுமென கடந்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

063187nurse4

SHARE