வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு : நெருக்கடியில் நோயாளர்கள்

165

 

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு சென்ற நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள மருந்தக பிரிவுகள் முற்றாக செயழிந்துள்ளன.

இந்த போராட்டம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE