நுவரெலியாவில் தனியார் வைத்தியசாலையில் ஒரு வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக பரிதாபமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் தைரோட் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய மருந்து உட்கொண்டதன் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
34 வயதான புஷ்பா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தினை உட்கொண்டதை அடுத்து அவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவரின் உயிரிழப்பை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், வைத்தியசாலைக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
வைத்தியசாலையின் முறையற்ற செயற்பாடே மரணத்திற்கு காரணம் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விடயம் பூதாகரமாகியுள்ள நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பெண் நுவரெலியா மாவட்டத்தில் பிளக்பூல் (BLACKPOOL) பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.