வைத்தியர் செலுத்திய வாகனத்தில் மோதிய நபர் பலி: வைத்தியருக்கு மாரடைப்பு

276

வைத்தியர் ஒருவர் செலுத்திச் சென்ற வாகனம் பாதசாரி மீது மோதியதால் 34 வயது நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்றைய தினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்காவில பகுதியைச் சேர்ந்த 34 வயதான வத்தலாகே இந்திக சமன் என்பவர் பலியாகியுள்ளதாக சிராபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

images

சிலாபம்-குருநாகல் வீதியில் பஸ் ஒன்றில் இருந்து இறங்கி வீதியைக் கடந்த நபர் மீது வைத்தியர் ஒருவர் தான் செலுத்தி வந்த ஜீப் வண்டியை மோதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடுங்காயங்களுக்கு உள்ளான நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்தச் சம்பவத்திற்கு பின்னர் சிலாபம் வைத்தியசாலையில் பணிபுரியும் குறித்த வைத்தியருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியரும் தற்சமயம் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிப்பட்டுள்ள இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

SHARE