வைரலாகி வரும் அடுத்த படத்திற்காக பயிற்சி எடுக்கும் திரிஷாவின் புகைப்படம்

150
அடுத்த படத்திற்காக திரிஷா எடுக்கும் பயிற்சி... வைரலாகும் புகைப்படம்

திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் திரிஷா. இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கிறார். தற்போது இவரது நடிப்பில் ராங்கி, பரமபதம் விளையாட்டு, கர்ஜனை ஆகிய படங்கள் உருவாகி இருக்கிறது. மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் திரிஷா நடிக்கிறார்.
சரித்திரம் படம் என்பதால் இதற்காக நடிகை திரிஷா தற்போது குதிரை பயிற்சி செய்து வருகிறார். குதிரையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருக்கும் திரிஷாவிற்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திரிஷாபொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், ரியாஸ் கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் தாய்லாந்து, பாண்டிச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
SHARE