
தனுஷ்
கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் தனுஷ், தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், தனுஷ் ரிகர்சல் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
