வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிவப்பு அலரி

412

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் அலரி என்கிற மலரின் இலைகள் நாம் அன்றாடம் பார்க்க கூடிய சாலையோரங்களில், கோயில்களில் இந்த செடிகளை பார்க்க முடியும், சிவப்பு நிற பூக்களையும் நீளமான இலைகளையும் கொண்ட இந்த செடியின் பூக்களை நாம் அன்றாடம் இறைவனுக்கு சூடி வழிபடுவதும் உண்டு. இதனை தமிழிலே இருவாட்சி பூக்கள் என்றும் சொல்வதுண்டு.

இந்த செடியின் இலைகளில் சயனைடு என்கிற விஷத்தன்மை மிகுந்து காணப்படுவதால் நச்சு தன்மை கொண்டதாக விளங்குகிறது. நுண் கிருமிகளை போக்கக் கூடியதாக, நோய் எதிர்ப்பு தன்மை கொண்டதாக விளங்குகிறது. இந்த பூக்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களிலும் கிடைக்கின்றன. பூக்களை பயன்படுத்தி நாம் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும் மருந்து ஒன்றை தயார் செய்யலாம்.

அலரி செடிகள் மிகுந்த நச்சு தன்மை கொண்டவை என்பதால் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இவற்றை எடுத்துக் கொள்வது சிறப்பாகும். சிவப்பு அலரி பூக்களை கொண்டு நாம் தயார் செய்யும் மருந்துக்கு தேவையான பொருட்கள். சிவப்பு அலரி பூக்கள் ஐந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீர் சேர்த்து ஒரு கஷாயம் தயார் செய்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்வதற்கு 5 பூக்களே போதுமானதாகும்.

இதை கொதிக்க வைத்து எடுத்துக் கொண்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பருகுவதன் மூலம் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள காய்ச்சல், தோல் நோய் போன்றவை குணமாகும். வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள தோல் நோயில் இருந்து விரைவில் இதன் மூலம் விடுபடலாம். காய்ச்சலை போக்கும் குணம் இந்த பூக்களுக்கு உள்ளது. இதனுடன் சிறிது இனிப்பு சேர்த்தும் பருகலாம். உடலில் ஏற்படும் வலியை போக்கக் கூடியதாக அமைகிறது.

இதய தசைகளை பலப்படுத்த கூடியதாக அமைகின்றன. இதய நாளங்களில் தேங்கியிருக்கும் ரத்தத்தை கரைக்கக் கூடிய குணம் இந்த அலரி பூக்களுக்கு உள்ளது. ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சு திணறலை கட்டுப்படுத்தக் கூடியது. ஒரு மேற்பூச்சு மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் சிவப்பு அலரி செடியின் வேர் பொடி, விளக்கெண்ணெய் தேவையான அளவு விளக்கெண்ணெயை எடுத்துக் கொண்டு அதனுடன் இந்த வேர்பொடியை சேர்க்க வேண்டும்.

விளக்கெண்ணெயை சூடாக்கி அதனுடன் இந்த வேர்பொடியை கலக்கி, ஒரு களிம்பு பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும். இதை வெளி மூலத்திற்கான மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தலாம். அதே போல் மஞ்சள் அரளி வேர்பொடியை இதே போன்று நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி காது வலிக்கான ஒரு சொட்டு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

SHARE